ஓப்பனிங் To கிளைமாக்ஸ் ஒன்னுவிடாமல் காப்பியடித்த லோகேஷ்… வீடியோ clip உடன் அம்பலமாக்கிய நெட்டிசன்ஸ்!

Author: Rajesh
19 February 2024, 4:36 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

lokesh kanagaraj

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் குறித்த ஒரு மோசமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியிருந்தார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் , ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தை மலையாளத்தில் மம்முட்டி நடித்து 1989ஆம் ஆண்டு வெளிவந்த முத்ரா என்ற திரைப்படத்தில் இருந்து ஒரு சீன் கூட விடாமல் காப்பியடித்து தான் லோகேஷ் எடுத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளையே போன்றே மாஸ்டர் படத்தின் ஒவ்வொரு காட்சியும் இருப்பதாக நெட்டிசன்ஸ் வீடியோ கிளிப் உடன் வெளியிட்டு அம்பலமாக்கியுள்ளனர். இதனையடுத்து கோலிவுட்டின் அடுத்த அட்லீ லோகேஷ் என பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதனால் அடுத்ததாக ரஜினி படத்தை இயக்கபோதும் லோகேஷுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 324

    0

    0