லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?

Author: Prasad
22 April 2025, 5:01 pm

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் இறுகட்ட Post Production பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. 

lokesh kanagaraj decided to take break from social media

பொதுவாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் உருவாகிறது என்றால் அது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வருகிறதா? இல்லையா? என்ற கேள்வியும் ஆர்வமும் எழுவது வழக்கம். அந்த வகையில் இத்திரைப்படத்திற்கும் அக்கேள்வி எழுந்தது. ஆனால் இத்திரைப்படம் அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே இத்திரைப்படம் LCU இல்லை என லோகேஷ் அறிவித்துவிட்டார். 

லோகேஷ் எடுத்த திடீர் முடிவு

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் திடீரென எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. இது குறித்து தனடு “X” தளத்தில் அறிவித்துள்ள லோகேஷ் கனகராஜ், “கூலி புரொமோஷன் பணிகள் தொடரும் வரை நான் சிறிது காலம் என்னுடைய அனைத்து சமூக வலைத்தள கணக்குகளுக்கும் Break எடுத்துக்கொள்ளப் போகிறேன். அன்புடன் லோகேஷ் கனகராஜ்” என்று பகிர்ந்துள்ளார். இச்செய்தி ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • new title for kamal haasan in thug life movie அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?
  • Leave a Reply