மீண்டும் LCU…. கமல்ஹாசன் கொடுத்த அப்டேட் : வெளியான மாஸ் தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan10 December 2024, 4:01 pm
தமிழ் சினிமாவில் உச்ச இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தனது திரைக்கதையால் குறுகிய காலத்திலேயே பெரும் புகழை அடைந்தார்.
விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ என இருபடங்களை இயக்கினார். கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை கொடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தார்.
இதையும் படியுங்க: விஜய் அண்ணாக்குத்தான் என் ஓட்டு… சத்தியம் செய்த பிரபல சீரியல் நடிகை!!
கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்த லோகேஷ்
தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து வருகிறார். அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களை இயக்கும் லோகேஷ் மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ், கமல் சாரை வைத்து படம் இயக்க உள்ளேன், மீண்டும் அவரை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய வரம் என கூறியுள்ளார்.
மேலும் அந்த படம் விக்ரம் 2ஆக கூட இருக்காலம் என கூறியுள்ளது அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.