சஞ்சய் தத்துக்கே இவ்வளவுதானா? த்ரிஷா முதல் மன்சூர் அலிகான் வரை.. லியோ பட நடிகர்களின் சம்பள விவரம்..!
Author: Vignesh19 October 2023, 11:54 am
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் “லியோ” இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருக்கின்றனர்.

ரசிகர்களிடையே லியோ குறித்த எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில் சில ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சில சம்பவங்களை செய்து வருகிறார். முன்னதாக விஜய்யின் ஆர்வக்கோளாறுகள் சிலர் முதல் காட்சியை பார்த்துவிட்டு டைட்டில் கார்ட் முதல் கிளைமாக்ஸ் வரை பல முக்கிய காட்சிகளை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

லியோ திரைப்படம் கிட்டதட்ட ரூ.300 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் மொத்தம் ரூ.120 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாகவும், த்ரிஷா ரூ.5 கோடியும், சஞ்சய் தத் படத்திற்காக ரூ.8 கோடி ரூபாய்யும், பிரியா ஆனந்த்துக்கு ரூ.50 லட்சம் சம்பளமாகவும், நடிகர் அர்ஜூன் ரூ.1 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம், இயக்குநர் கெளதம் மேனன், இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இவர்களின் ரூ.30 முதல் 70 லட்சங்கள் வரை தோராயமாக வேறுபடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.