‘செம ஆளுதான்யா’… விக்ரம் படத்திலேயே LEO படத்திற்கு ஹிண்ட் கொடுத்த லோகேஷ் ; பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!
Author: Babu Lakshmanan7 February 2023, 2:32 pm
வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது என்று இணைந்து இருக்கிறார்.
வாரிசு படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தளபதி 67 படத்தின் அப்டேட்களை அடுத்தடுத்து பார்க்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.அதன்படி, தளபதி67 படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர், நடிகைகளின் விபரங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. மேலும், படத்திற்கு லியோ என்ற தலைப்பும், வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
இதனிடையே, LEO பட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனால், பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வந்தனர்.
இப்படிபட்ட நிலையில் தான் விக்ரம் படத்தின் திரைக்கதை என்று சொல்லப்படும் ஒரு புத்தகம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த வாசன், “காக்ஷ்மீருக்கு ஒரு கேஸ் விஷயமாக சென்றிருந்தோம். அவன் எனக்கு பழக்கமானவன். அவன் பெயர் அமர் என்று சொன்னார்கள் ஆனால் அது அவனுடைய உண்மையான பெயர் இல்லை” என்று கூறும் வசனம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், லியோ படத்தின் படக்குழுவினரும் காஷ்மீருக்கு படப்பிற்காக சென்றிருப்பது, கிட்டத்தட்ட லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி மற்றும் கைதி படத்தில் நெப்போலியன் என்பவரும் காவலராக நடித்திருப்பார். அவரும் தளபதி 67 படத்தின் பூஜையின் போது கலந்து கொண்டிருந்தார். இது அனைத்தும் லியோ படம் LCU-வுக்குள் இருப்பதை உறுதி செய்ததாக ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.