மெட்ராஸ் பாஷை பேசி கமலை கெட்ட வார்த்தையால் திட்டிய லோகேஷ் கனகராஜ் – வீடியோ!
Author: Shree27 June 2023, 7:26 am
கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 450 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்றது. விக்ரம் படம் முழுவதும் லோகேஷின் பேன் பாய் சம்பவமாக அமைந்தது குறித்து அனைவர்க்கும் தெரியும். இப்படத்தில் கைதி, பழைய விக்ரம் போன்ற பல reference பயன்படுத்தி லோகேஷ் ஒரு தனி யூனிவெர்ஸ் படைத்திருந்தார்.
கமலின் தீவிர ரசிகனான லோகேஷ் கனகராஜ், அவரை வச்சி சிறப்பான சம்பவம் செய்துவிட்டார். அப்படித்தான் விக்ரம் படத்தின் ஷூட்டிங்கில் கமல் ஹாசன் ஒரு மாஸான காட்சியில் நடித்து முடித்தவுடன் லோகேஷ் கனகராஜ் மெட்ராஸ் பாஷை பேசி குதூகலத்தில் ஆர்பரித்துள்ளார். அதை கேட்டு ஒரு நிமிஷ ஜர்க் ஆன கமல் யாருடா அது? என கேட்க அங்கிருந்தவர்கள் உற்சாகத்தில் கத்திவிட்டார் என கூறினார்கள். இதனை பேட்டி ஒன்றில் கூற லோகேஷ் வெட்கத்துடன் சிரித்தார். இதோ அந்த வீடியோ: