லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…
Author: Prasad12 April 2025, 12:46 pm
லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ…
“வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர் மிஷ்கின் இயக்கிய “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” திரைப்படத்தில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவே உற்று நோக்கக்கூடிய நடிகராக ஆனார்.

அதனை தொடர்ந்து “சோன் பப்டி”, “வில் அம்பு” திரைப்படங்களில் நடித்த ஸ்ரீ, லோகேஷ் கனகராஜ்ஜின் முதல் திரைப்படமான “மாநகரம்” திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு “இறுகப்பற்று” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவ்வாறு பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வரும் ஸ்ரீயின் தற்போதைய புகைப்படம் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பரிதாப நிலை?
ஸ்ரீ தற்போது மிகவும் ஒல்லியாக எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். மேலும் அவர் ஒரே அறைக்குள் அடைந்துக்கிடப்பது போல் அவரது இன்ஸ்டா புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது ஆபாசமான ஒரு தொனியில் ஒரு வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருக்கு அப்படி என்னதான் ஆயிற்று?என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.