லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Author: Shree
6 November 2023, 12:42 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

lokesh-kanagaraj-1

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. கிடுகிடுவென வளர்ந்து வரும் இயக்குனரான லோகேஷ் சொத்து மொத்தம் ரூ. 40 கோடி என கூறப்படுகிறது. இவர் அடுத்ததாக இயக்கப்போகும் தலைவர் 171 படத்திற்கு ரூ. 45 கோடி சம்பளம் வாங்கப்போகிறார் என செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்கிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 410

    0

    0