அந்த மாலை மீது நம்பிக்கை இல்ல.. கருங்காலி ரகசியத்தை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்..!

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், படங்களில் பிஸியாக நடித்து வரும் சுருதிஹாசன் கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றி உள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது. அதை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், கடந்த மாதம் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை கமலின் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, சுருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த ஆல்பத்திற்கு “இனிமேல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 14ஆம் தேதி கமலின் ராஜ் கமல் நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த ஆல்பத்திற்கு சுருதிஹாசன் இசையமைக்க கமலஹாசன் வரிகள் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் புதிய அப்டேட் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆல்பத்தின் பாடலின் முழு வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாடல் வெளியீட்டு விழாவிற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளனர். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் இடம் அவர் அணிந்திருக்கும் கருங்காலி பயங்கர ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து, அதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டு வந்தது. அதற்கு பதில் அளித்த அவர், ஒரு உண்மையை சொல்லிவிடுகிறேன் எந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மாலையை நான் அணியவில்லை.

விக்ரம் படப்பிடிப்பு சமயத்தில், இருந்து தான் இதை நான் அணிந்து வருகிறேன். ஒருமுறை படப்பிடிப்பு முடித்துவிட்டு திரும்பும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினேன். நல்லபடியாக பெரிதாக எந்த சேதமும் இல்லை. இதை பார்த்துவிட்டு என்னுடைய நண்பர் கலை இயக்குனர் சதீஷ் தான் இந்த மாலையை வாங்கி கொடுத்தார். இதை அணிந்து கொண்டால் என்னை சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டி குறையும் என்றும் சொன்னார். அவர், ஆசையாக வாங்கி கொடுத்தது என்பதால் மறுக்க முடியாமல் அணிந்து இருக்கிறேன். மற்றபடி நம்பிக்கை ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

5 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

6 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

6 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

7 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

8 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

8 hours ago

This website uses cookies.