ரஜினியால் லோகேஷுக்கு அடித்த ஜாக்பாட்.. எங்கேயோ போய்ட்டாரே..!

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர், விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

மேலும் படிக்க: என்னால தான் அவரு இறந்துட்டாரு.. உருக்கமாக பேசிய ரெடின் கிங்ஸ்லி மனைவி..!

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து, மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் படிக்க: டிஷ்யூம்.. டிஷ்யூம்.. அவர் கூட 6 வருஷமா பேச்சுவார்த்தை இல்லை: மனம் திறந்த ஜிவி பிரகாஷ்..!

இப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. தலைவர் 171 படத்தில் அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக கமிட் ஆகியுள்ளார். தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது, மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என லோகேஷ் சமீபத்திய பிரஸ்மீட் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க: அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? ஆத்தாடி கிடுகிடுனு உயர்த்திட்டாரே..!

இந்த நிலையில், தலைவர் 171 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி டீசருடன் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். தற்போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது, ரஜினி கையில் வாட்ச் கை விளங்காக மாட்டப்பட்டு இருக்கிறது.

மேலும், பின்னணியில் வாட்ச் தான் போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது. அதனால் இது டைம் ட்ராவல் கதையாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக, தலைவர் 171 படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் நல்லவன் கெட்டவன் என்று இல்லாமல் இரண்டிற்கும் இடையில் இருக்கும் என்றும், இதுவரை ரஜினி நடித்திராத ஒரு கேரக்ராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் லோகேஷ் தெரிவித்து இருந்தார். தற்போது அவர் சொன்ன படி ரஜினி கைதியாக இந்த போஸ்டரில் இருகிறார். கைகடிகாரத்தால் செய்யப் பட்டவிலங்கு அவர் கையில் மாட்டப் பட்டிருப்பது இந்தப் படம் டைம் டிராவலை மையப்படுத்தி இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், தலைவர் 171 படத்தின் கதை ஹாலிவுட் திரைப்படமான The Purge படத்தில் எடுக்கப்பட்டுள்ளது என பிரபல பத்திரிகையாளர் தகவலை பகிர்ந்து உள்ளார். ஹாலிவுட்டில் James DeMonaco 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் இன்ஸ்பிரேஷன் ஆகி தான் தலைவர் 171 படத்தின் கதை லோகேஷ் எழுதியுள்ளார். லியோ படம் வெளிவந்ததை A History of Violence படத்தின் இன்ஸ்பிரேஷன் என்பதை நாம் அறிவோம். அதேபோலதான் தலைவர் 171 இன்ஸ்பிரேஷன் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜ் இப்படத்திற்காக ரூ. 60 கோடி வரை சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது

Poorni

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

14 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

15 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

16 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

16 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

16 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

16 hours ago

This website uses cookies.