பயத்தை காட்டிய லியோ…. தலைவர் 171ல் லோகேஷ் எடுக்கும் புது முயற்சி!
Author: Shree20 November 2023, 7:01 pm
கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.
அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.
இப்படியான நேரத்தில் லியோ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி குவிக்காமல் வசூலில் டார்கெட் ரீச் செய்யவில்லை. இதனால் அடுத்து ரஜினி படத்தை இயக்குவதில் லோகேஷ் கனகராஜுக்கு கொஞ்சம் பயம் ஏற்பட்டுள்ளதாம். எனவே அடுத்து ரஜினி படத்தை திட்டமிட்டு இயக்கவும், இதுவரை எந்த ஒரு இயக்குனரும் எடுக்காத புதிய முயற்சியையும் எடுக்க உள்ளாராம்.