சமூகவலைத்தளங்களில் இருந்து விலகப்போகும் லோகேஷ் கனகராஜ் – காரணம் என்ன தெரியுமா?

Author: Shree
31 October 2023, 3:38 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

lokesh vijay - updatenews360

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதாவது அவர் அடுத்த 6 மாதத்திற்கு சமூகவலைத்தளத்தில் இருந்து விலக உள்ளாராம். காரணம் ரஜினியின் 171 படத்தின் ஸ்க்ரிப்டை முழு மூச்சுடன் இறங்கி உருவாக்க உள்ளாராம். எனவே 6 மதத்திற்கு லோகேஷ் மிகவும் பிசியாக இருப்பார். இப்படத்தில் ரஜினியின் வில்லன் முகத்தை வெறித்தனமாக இறக்கவுள்ளாராம் லோகேஷ். ரஜினியும் அதற்கு முழு மனதுடன் ஒப்புக்கொண்டு படத்தில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 355

    0

    0