‘லியோ’ படத்துக்கு பெரிய கும்பிடு போட்ட லோகேஷ் கனகராஜ்.. என்னாச்சு? ரசிகர்கள் குழப்பம்!
Author: Udayachandran RadhaKrishnan14 March 2023, 2:31 pm
கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார்.
இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.
பின்னர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது.
இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இதற்காக காஷ்மீருக்கு படக்குழு அண்மையில் சென்றிருந்தது.
இந்த நிலையில் இன்று லோகேஷ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இது குறித்து லோகேஷ் இன்னு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் அண்ணாவுக்கு நன்றி, எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி என கூறி ட்விட் செய்துள்ளார்.
இதுக்கு காரணம் என்னவாக இருக்கும், மாஸ்டர் பெரிய ஹிட் படமாக உருவானதற்கு காரணமா அல்லது தற்போது லியோ படத்தில் நடித்தற்கு நன்றி கூறுகிறாரா என்பது தெரியவில்லை, ஆனால் விஜய்யுடன் உள்ள புதிய போட்டோவை அவர் பகிர்ந்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.