யாரும் காரி துப்பாத அளவுக்கு.. ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் குறித்து லோகேஷ் OPENTALK..!

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், படங்களில் பிஸியாக நடித்து வரும் சுருதிஹாசன் கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றி உள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது. அதை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், கடந்த மாதம் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை கமலின் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, சுருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த ஆல்பத்திற்கு “இனிமேல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 14ஆம் தேதி கமலின் ராஜ் கமல் நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த ஆல்பத்திற்கு சுருதிஹாசன் இசையமைக்க கமலஹாசன் வரிகள் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் புதிய அப்டேட் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆல்பத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. முன்னதாக, லோகேஷ் கனகராஜ் மிகவும் நெருக்கமாக ரொமான்டிக்காகவும் சுருதிஹாசன் உடன் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆண்டவர் உங்களையும் இப்படி மாத்திட்டாரா என்று கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அப்படி நடிக்க ஏன் ஒத்துக் கொண்டேன் என்ற பதிலை லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஒருமுறை ராஜ்கமல் நிறுவனத்திடம் இருந்து போன் வந்தது. அப்போது, சுருதிஹாசன் ஒரு ஆல்பம் உருவாக்கி இருக்கிறார். அதில், நடிக்குமாறு கேட்டார்கள். முதலில் ஓகே சொல்லவில்லை, பின்பு இவ்வளவு பெரிய நிறுவனம் அதுவும் கமலஹாசனின் நிறுவனம் கேட்கும் போது முடியாது என்று கூற முடியவில்லை. அதன் பின்னர், ஏன் என்னை தேர்வு செய்தீர்கள் என்று தெரியவில்லை என்றும், ஷூட்டிங் போவதற்கு நான் தைரியமாக இல்லை. யாரும் காரி துப்பாத அளவுக்கு ஏதாவது நான் பண்ணி இருக்கேன் என்று நினைக்கிறேன் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

19 minutes ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

23 minutes ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

1 hour ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

2 hours ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

2 hours ago

This website uses cookies.