அந்த விஷயத்தில் அட்லீயை மிஞ்சிய லோகேஷ் கனகராஜ்…. என்ன மேன் இதெல்லாம்?

Author: Shree
24 July 2023, 6:34 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.

lokesh kanagaraj - updatenews360

தற்போது லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரது படங்களை பெருவாரியான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் லோகேஷ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தின் ஒரு காட்சி புரூஸ் லீ நடிப்பில் வெளிவந்த enter the dragon என்ற படத்தின் காட்சியில் இருந்து திருடப்பட்டதாக ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.

அதே போல் இதற்கு முன்னர் Better Call Saul எனும் ஆங்கில வெப் தொடர் போன்று இருப்பதாக சிலர் கூறியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் படங்கள் காப்பி என்பதால் இந்த விஷயத்தில் அட்லீயையே மிஞ்சிடுவாரு போலயே என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu