நீ செஞ்ச வேலைக்கு உன் வீட்டுக்கு வேற வரனுமா.. லோகேஷை பங்கமாய் கலாய்த்த விஜய்..!

Author: Vignesh
8 August 2023, 5:00 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

lokesh leo

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

vikram-updatenews360

இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாந்தனு லோகேஷ் குறித்தும் மாஸ்டர் படம் குறித்தும் பேசியுள்ளார். மாஸ்டர் படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்திருந்தார். மிகவும் குறைந்த நேரமே இடம்பெற்று இருந்ததால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானார் சாந்தனு. இதற்காக லோகேஷ் தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

shanthanu lokesh-updatenews360

இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இரவு உணவு விருந்திற்காக தனது வீட்டிற்கு அழைத்தபோது செல்ல முடியவில்லை என்று சாந்தனு தெரிவித்திருந்தார். மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற போது விஜயிடம் லோகேஷ் சாந்தனு ஓவரா பன்றான்ண்ணா வீட்டுக்கு கூப்பிட்டா கூட வர மாட்டேன்றான் என்று தெரிவித்திருந்ததாகவும், அதற்கு பதில் அளித்த விஜய் நீ அவனை கூப்பிட்டு வச்சு பண்ண வேலைக்கு உன் வீட்டுக்கு வேற வரணுமா என ஜாலியாக லோகேஷிடம் விஜய் தெரிவித்ததாக சாந்தனு அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 324

    0

    0