பரிதாப நிலையில் நடிகர் சிரிக்கோ உதயா
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த ஷோவில் நடித்த பலர் இன்று சினிமாவில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்,சிலருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் அப்படியே ஒதுங்கி விட்டனர்.
இதையும் படியுங்க: என் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தவர் சிம்பு…பிரபல காமெடி நடிகர் உருக்கம்.!
லொள்ளு சபா தொடரில் சந்தானம்,சுவாமி நாதன்,ஜீவன்,மாறன்,பாலாஜி மனோகர் மதுமிதா போன்ற பலர் நடித்தனர்,இவர்களுடன் உதய் என்கிற சிரிகோ உதயாவும் நடித்து பிரபலம் ஆனார்,இவர் இந்த நிகழ்ச்சியில் பிரபலம் ஆன பின்பு பல படங்களில் குணச்சித்திர காமெடியனாக நடித்தார்,அதுமட்டுமில்லாமல் சந்தானத்தின் பல படங்களுக்கு காமெடி வசனங்கள் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் சர்க்கரை வியாதி நோயால் பல வருடமாக அவதிப்பட்டு வந்த இவர் சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,தற்போது இவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக வலது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் விரைவில்,அவர் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.மேலும் இவர் கூட நடித்த சக நடிகர்கள் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.