வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் விஜய்யின் 68வது திரைப்படமாக வெளியாகி உலகம் முழுக்க விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
இப்படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி வைபவ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் இவர்களையும் தாண்டி மறைந்த நடிகரான விஜயகாந்த் நடித்துள்ளது போல் ஏஏ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது மேலும் படத்திற்கு சுவாரசியத்தை தூண்டியிருந்தது .
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடையில் வெளியான இந்த திரைப்படம் கலமையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த லண்டன் ரசிகர்கள் அடுத்தடுத்து பல பேர் பெரும் அதிர்ச்சியை தெரிவித்து வருகிறார்கள். ஒரு ரசிகர் மங்காத்தா அளவிற்கு படத்தை எதிர்பார்த்து வந்தோம்.ஆனால் இந்த படம் ரொம்ப மோசமா எடுத்து வச்சிருக்காங்க என கூறியிருந்தார்.
இன்னொறு ரசிகர்கள்…. விஜய் தேர்தலில் இருக்கும் சமயத்தில் இது போன்ற வில்லன் கதாபாத்திரம் நேற்று நடித்தவே கூடாது…. இது அவரது பெரியருக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமைந்து விட்டது என கூறி இருக்கிறார்.
மற்றொரு ரசிகர் கோட் படத்தை யாரும் பார்க்காதீங்க…. அப்படி பார்த்தால் அப்பா மகன் உறவு கெட்டுப் போகும். அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தில் அப்பா மகனின் விரோதம், வன்மத்தை காட்டி இருக்கிறார்கள். இது போன்ற கதைகளில் விஜய் நடித்திருக்கவே கூடாது. இது வெங்கட் பிரபு படமே இல்லை. அவர் இயக்கிய பிரியாணி படத்தை விட மோசமாக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.
எங்கள் தளபதி அரசியல் போகும் நேரத்தில் இப்படி ஒரு மோசமான படத்தை VP தளபதிக்கு தருவார் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை..
— vaishali (@vaisu_tweets) September 5, 2024
தேவையில்லாத படம்
– லண்டன் விஜய் ரசிகர்கள்#Goat #GoatReview pic.twitter.com/em08Rxw7do