என்ன ரொம்ப இளச்சு போயிட்டீங்க.. ரசிகர்களை ஆச்சிரியப்பட வைத்த லாஸ்லியா.. Latest pics..!

Author: Rajesh
24 February 2022, 1:08 pm

லொஸ்லியா மரியநேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரின் அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவின் இருவரின் இடையே காதல் மலர்ந்தது. லாஸ்லியாவின் தந்தை காதலை எதிர்த்ததால் இருவரும் காதலை கைவிட்டனர். பிக்பஸ்ஸிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார். சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் லொஸ்லியா தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

அந்த வகையில் தற்போது, கிழிந்த பேண்ட் போட்ட புகைபடத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்க ரொம்ப இளச்சு போயிட்டீங்கன்னு கமெண்ட் செய்துள்ளார்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!