அவர ரொம்ப மிஸ் பண்றேன்.. கவினின் திருமணம் குறித்து மனம் திறந்த லாஸ்லியா..!

Author: Vignesh
7 October 2023, 2:15 pm

லாஸ்லியா மரியனேசன் ( Losliya Mariyanesan ) இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

losliya mariyanesan - updatenews360

அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லாஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார். இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது.

பின்னர், உடல் எடை குறைத்து சிக்கென மாட்டார் லுக்கிற்கு மாறிவிட்டார். இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் ஜோடியாக லாஸ்லியா நடித்திருந்தார். இதற்கு பல்வேறு ரசிகர்களும் ஒரு அண்ணன் கூட போய் படுக்கையறை காட்சி நடிக்கலாமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பினர்.

losliya mariyanesan - updatenews360

இதனிடையே, சோசியல் மீடியாக்களில் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்போது தர்ஷனுடன் டேட்டிங் சென்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இதனிடையே, நடிகர் கவின் நீண்ட நாள் காதலியான மோனிகாவை கடந்த ஆகஸ்ட் மாதம் இருபதாம் தேதி திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பேசிய லாஸ்லியா கவினுக்கு திருமணமான விஷயம் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய சினிமா வளர்ச்சி பெரிய அளவில் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

losliya mariyanesan - updatenews360

மேலும் நீங்கள் எந்த விஷயத்தில் உடைந்தீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் என்னுடைய அப்பா விஷயம் தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் ஒருவரின் இடத்தை இன்னொரு நபரால் எப்போதும் மாற்ற முடியவில்லை. தினமும் நான் ஒரு விஷயம் மீஸ் செய்கிறேன் என்றால் அது என்னுடைய அப்பாவை தான் என்று தெரிவித்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 374

    0

    0