“Health Issues”காரணமாக உடல் எடையை குறைத்தாரா லாஸ்லியா.? அவரே அளித்த ஓப்பன் டாக்…!

Author: Rajesh
30 March 2022, 11:16 am

லாஸ்லியா மரியநேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரின் அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவின் இருவரின் இடையே காதல் மலர்ந்தது. லாஸ்லியாவின் தந்தை காதலை எதிர்த்ததால் இருவரும் காதலை கைவிட்டனர். பிக்பஸ்ஸிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார். சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதனிடையே நடிகர் அஸ்வின் உடன் ஜோடியாக அவர் ‘பேபி நீ சுகர்’ என்ற பாடலில் ஆடி இருக்கிறார் லாஸ்லியா. இந்நிலையில் அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், அவரை பற்றிய சில விஷயங்கள் ஓப்பனாக பேசி இருக்கிறார்.

“எனக்கு Health Issues இருந்தது, அதனால் தான் எடையை குறைக்க வேண்டி சூழ்நிலை ஏற்பட்டது, பிக் பாஸ் வருவதற்கு முன்பு நான் ஒல்லியாக இருந்தேன். அதன் பிறகு தான் எனக்கு உடல் எடை அதிகரித்தது, தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து இருக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், சினிமா தான் என் துறை, அதற்கு, நான் கடின உழைப்பை போட விரும்புகிறேன் தெரிவித்திருந்தார்.”

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1361

    0

    0