கயாடு மீது காதல்? படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்.. இதெல்லாம் தேவையா?
Author: Udayachandran RadhaKrishnan15 April 2025, 12:41 pm
கயாடு லோஹர் ஒரே ஒரு படத்தால் படு பேமஸாகி வருகிறார். இவர் நடித்து அண்மையில் வெளியான டிராகன் படம் 100 கேடி ரூபாய் வசூல் செய்தது.
இதையும் படியுங்க: எனக்கு எதுக்கு ஆட்ட நாயகன் விருது? தோனி கைக்காட்டிய அந்த வீரர் யார் தெரியுமா?
காதல் காட்சிகளில் பிரதீப் ரங்கநாதனுடன் நெருக்கமாக நடித்த கயாடு லோஹர், ஏற்கனவே கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். கயாடு நடித்த அறிமுக படடே படு ஹிட் ஆனதால், அவரின் அழகு, கவர்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
தற்போது தமிழ் சினிமாவை தலையில் தூக்கி வைத்து கயாடுவை கொண்டாடி வரும் நிலையில், அதர்வாவுடன் இதயம் முரளி படத்தில் கயாடு நடித்து வருகிறார். அந்த படத்தில் முக்கிய ரோலில் இசையமைப்பாளர் தமன் நடித்து வருகிறார்.

பாய்ஸ் படத்திற்கு பிறகு தமன் மீண்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கயாடு லோஹ்ர் பிறந்தநாளை இதயம் முரளி படக்குழு கொண்டாடியது. அப்போது இசையமைப்பாளர் தமன் இன்ப அதிர்ச்சியாக பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

கயாடு போட்டோ ப்ரேம்களை வைத்து ஒரு பரிசை கொடுத்தார். இது பேசுபொருளாகியுள்ளது. கயாடுவுடன் நடித்த பிரதீப், இயக்குநர் அஸ்வர் மாரிமுத்து போன்றோர் எந்த பரிசையும் கொடுக்கவில்லை. ஏன் இதயம் முரளி பட ஹீரோ அதர்வாவே சைலண்டாக இருக்கும் போது, தமனுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
