“அது எல்லாம் போட்டோஷாப்” .. இணையத்தில் தீயாய் பரவும் “லவ் டுடே” இயக்குனர் பிரதீபின் புதிய பதிவு..!

Author: Vignesh
17 November 2022, 2:30 pm

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்து வரும் திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படத்தின் இயக்குநரும் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தார்.

ஆனால் இந்நிலையில் தற்போது இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் குறித்து நிறைய எதிர்மறையான விமர்சன கருத்துக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

love today -updatenews360

அதாவது, பிரதீப் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் ,நடிகர் விஜய் போன்றோரை விமர்சித்ததாகவும் ,அவதூறாக பேசியதாகவும் அவர் பெயரினுடைய அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்களால் தோண்டி எடுக்கப்பட்டு , பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்.

lovetoday-updatenews360

இந்த சம்பவமானது இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது மட்டுமல்லாமல், சர்ச்சையும் கிளப்பியது.

இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய முகநூல் பக்கத்தை முழுவதுமாக செயலிழக்க செய்யவே, அதற்கும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது இந்த சம்பவத்திற்கு டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.

pradeep ranganathan - updatenews360

அதாவது, தற்போது பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை.ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என் முகநூல் கணக்கு செயலிழக்கப்பட்டுள்ளது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை, மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி என்றும்,

மேலும் அதில் சில பதிவுகள் உண்மையானவை தான். ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதை சரிசெய்ய முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என்று அவர் பதிலளித்துள்ளார்.

வளர்ந்து வரும் ஒரு இளம் இயக்குனரின் இந்த செயலானது பலருக்கு விமர்சனம் செய்ய தூண்டினாலும், பலரும் அவருக்கு ஆதரவான கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 527

    0

    0