அப்போ படம் வேற லெவல்ல இருக்குமே… தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Author: Shree
28 November 2023, 8:53 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

iavana

தளபதி 68 படம் ஹாலிவுட் ரேஞ்சிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஹாலிவுட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த லூப்பர் படம் போன்ற கதைக்களம் தான் தளபதி 68 படம் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக லவ் டுடே இவானா நடிக்க உள்ளாராம்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…