அஜித் கழட்டிவிட்டா என்ன நான் இருக்கேன் வா… விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்த ஆண்டவர்!

Author: Shree
9 March 2023, 6:25 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் துணிவு படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார்.

ஆனால், அதன் பின் விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காததால் லைகா நிறுவனம், அஜித் என இருவருமே விக்னேஷ் சிவனை நீக்கியது, அவருக்கு பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தது, விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பயோவிலிருந்து ஏகே 62வை நீக்கியது, அஜித் ஃபோட்டோவை ட்விட்டர் கவரில் இருந்து நீக்கியது என சமூகவலைத்தளங்களில் முழுக்க தீயாக பரவியது.

இந்நிலையில் தற்போது இந்த விஷயத்தை அறிந்த கமல் ஹாசன் விக்னேஷ் சிவனை அழைத்து நான் படம் பண்றேன் கதை சொல்லு என கேட்க விறுவிறுப்பாக அடுத்தகட்ட வேலைகள் நடந்து வருகிறதாம்.

லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் இப்படம் உருவாகிறதாம். இதனை கமல் ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.45 பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?