இனி LOVE’லாம் செட் ஆகாது… 40 வயதில் திடீர் முடிவெடுத்த தனுஷ்? என்ன காரணம்!

Author: Shree
20 July 2023, 8:31 am

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளை பெற்றார். தனுஷுக்கு திருமணம் ஆன அந்த சமயத்தில் அவர் அப்படி ஒன்றும் பெரிய ஹீரோவாக இல்லை. இருந்தாலும் ரஜினி அவர் மீது பெரிய நம்பிக்கை வைத்து மகளை கட்டிக்கொடுத்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து தனுஷுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து அவரை டாப் ஹீரோ என்ற அந்தஸ்திற்கு உயர்த்தினார் ரஜினி. கிட்டத்தட்ட அவரது மொத்த வெற்றிக்கும் பின்னர் ரஜினி தான் இருந்தாராம். என்ன தான் திறமை இருந்தாலும் சினிமா துறையை பொறுத்தவரை யாரேனும் மிகப்பெரிய ஆள் பலம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் எந்த தொல்லைகளும், தொந்தரவும் இல்லாமல் முன்னேற முடியும்.

எனவே ஒவ்வொரு படி முன்னேற்றத்திற்கும் ரஜினி கூடவே இருந்ததால் தான் தனுஷ் இந்த உச்சத்தை தொட்டிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவை பிரிந்தபின்னர் ரஜினிக்கும் – தனுஷுக்கும் இடையில் மிகப்பெரிய மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் தனுஷ் இனிமே காதல் படங்களில் நடிக்கவே போதவில்லை என முடிவெடுத்துவிட்டாராம். ஆம் தனக்கு 40 வயது ஆகிவிட்டது என்றும் இனி தனக்கு லவ் படமெல்லாம் சுத்தமாக செட் ஆகாது, அடுத்த தலைமுறை நடிகர்கள் பண்ணட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே இனிமேல் கேங்ஸ்டர், ஆக்‌ஷன் ஜானர் படங்களில் நடிக்க ரெடியாகிவிட்டார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 425

    0

    0