சூரிக்கு தங்கையாக லப்பர் பந்து நடிகை…அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்..!

Author: Selvan
18 December 2024, 12:56 pm

சூரியின் மாமன் திரைப்படம்-லேட்டஸ்ட் அப்டேட்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்” திரைப்படத்தில் லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷுக்கு அம்மாவாக நடித்த ஸ்வாசிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை விலங்கு வெப் சீரியஸ் எடுத்த “பிரசாந்த் பாண்டிராஜ்’இயக்குகிறார்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கிறார்.

swasika act maman movie

சமீபத்தில் இப்படத்தின் பூஜை திருச்சியில் நடைபெற்றது.அதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார் என்ற தகவல் வந்தது.ஒரு குடும்ப உறவை மையப்படுத்தி இப்படத்தின் கதையில்,சூரி தாய்மாமன் கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

படம் முழுவதும் திருச்சியில் எடுக்க போவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில்,தற்போது சூரிக்கு தங்கையாக ஸ்வாசிகா இணைந்துள்ளார்.இவர் ஏற்கனவே சூர்யா 45 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையும் படியுங்க: புஷ்பா 2 கூட்டநெரிசல் சம்பவம்.. மூளைச்சாவு அடைந்த சிறுவன் : யார் பொறுப்பு?!

மாமன் படம் நடிகர் சூரிக்கு,ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.ஏற்கனவே இவர் நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை 2 வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள்,சூரியின் நடிப்பை காண ஆவலுடன் இருக்கின்றனர்.

  • Ashwin retirement announcement வைரலாகும் MISS U ASH ஹேஷ்டேக்…”அஸ்வின்”ஒரு சிங்கம்…செல்வராகவன் போட்ட பதிவு..!
  • Views: - 56

    0

    0

    Leave a Reply