தென்னிந்தியாவிலே முதல் படம்…நெட்ப்ளிக்ஸை திணறடித்த லக்கி பாஸ்கர்.!
Author: Selvan26 February 2025, 9:03 pm
OTT-யில் சாதனை படைத்த லக்கி பாஸ்கர்
தமிழில் தனுஷை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட் லூரி கடந்த வருடம் துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தை இயக்கி வெற்றிபெற்றார்.
பான் இந்திய படமாக வெளிவந்த இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்திரி நடித்திருப்பார்,அவர் கூடவே ராம்கி முக்கிய ரோலில் நடித்து அசத்திருப்பார்,வங்கியில் நடக்கும் ஊழலை மையப்படுத்தி ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்தது.
படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் இயக்குனர் விறுவிறுப்பாக கொண்டு சென்றார்,படம் வசூலை குவித்ததால் துல்கர் சல்மானின் கரியரில் முதல் 100 கோடி வசூல் செய்த படமாக அவருக்கு அமைந்தது.
தியேட்டரில் வெற்றிநடை போட்ட இப்படம் நவம்பர் 28 ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் தொடர்ந்து 13 வாரங்கள் ட்ரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை பெற்றுள்ளது லக்கி பாஸ்கர் திரைப்படம்.