ரஜினி குடும்பத்திற்கு சூனியம் வச்சிட்டாங்க? தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்!

Author: Shree
10 May 2023, 11:28 am

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் தனுஷை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்று விவாகரத்து செய்துவிட்டார்.

அதேபோல் இளைய மகள் சௌந்தர்யாவும் அஷ்வின் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு வேத் என்ற மகன் பெற்றெடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது விசாகன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து மீண்டும் ஒரு மகன் பெற்றுள்ளார். அண்மையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கிட்டத்தட்ட 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து அதிர்ச்சி அளித்தார்.

இதனிடையே போலிஸாரின் கிடுக்குபிடி விசாரணையில் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த வேலைக்காரியும், அவரது கார் ட்ரைவரும் பிடிபட்டனர். அந்த வகையில் வேலைக்காரியிடம் 100 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த புகாரில் 60 பவுன் மட்டுமே திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் போலீசார் விசாரணையில், கேள்விக்கேட்ட நிலையில் மழுப்பலான பதிலை தொரிவித்ததாக தகவல் வெளியாகியது.

பின்னர் திருடிய அந்த பெண் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி என்று தைரியமாக பதில் அளித்ததாகவும், தற்போது கணக்கில் வராமல் இதுபோன்று எவ்வளவு சொத்துக்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சேர்த்து வைத்துள்ளார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், இன்னும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மற்ற சொத்துக்கள் மற்றும் வீடுகளில் எவ்வளவு கணக்கில் வராத சொத்துக்கள் உள்ளது என்பதை குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய காரின் சாவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரஜினி குடும்பத்தில் தொடர்ந்து நடக்கும் இந்த திருட்டு சம்பவத்தின் பின்னணியில் ஏதோ பெரிய விஷயம் மறைந்திருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். மேலும், ரஜினியின் தீவிர ரசிகர்கள், பாவம் தலைவருக்கு சோதனை மேல் சோதனையா? அவருக்கு யாரேனும் சூனியம் வச்சிட்டு இருப்பாங்க அதான் இப்படியெல்லாம் நடக்குது என மூடத்தனமாக கூறி வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ