கவிதை மீதுள்ள ஆர்வத்தினால் பாடலாசிரியர் ஆகவேண்டும் என்ற முயற்சியோடு கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து வருடம் பணியாற்றி எழுத்தின் நுணுக்கங்களையும் கவிதை எழுதும் திறன்களை நன்கு கற்றுத்தெறிந்து தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் ஆனார் சினேகன். இவர் பாடலாசிரியர் மட்டும் அல்லாது நடிகர், கவிதை எழுத்தாளர் ஆக இருந்து வருகிறார்.
இதுவரைக்கும் 600 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியும், ஐம்பது திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். பாடல்கள் எழுதி பிரபலமானதை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அதிகம் பிரபலமானார் என்று சொல்லலாம்.
பிக் பாஸ்க்கு பிறகு திருமணம் கட்சி வேலை என பிசியாக இருந்து வந்த சினேகன் தற்போது, சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. கலைஞர் தொலைக்காட்சியில், தயாராக போகும் இந்த தொடரை யாரடி நீ மோகினி நினைத்தாலே இனிக்கும் சீரியல் புகழ் பிரியன் இயக்கப் போகிறாராம். பவித்ரா என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரில் சினேகன் அனிதா சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.