நிர்வாண கூத்து… என் உயிருக்கு ஆபத்து : பகீர் கிளப்பிய கவிஞர் தாமரை!!!

கோவை இளைஞர் சிவா மரணத்திற்கு நாடக திருமணம் மூலம் காரணமாக அமைந்த விஜி பழனிச்சாமி குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வரும், கவிஞர் தாமரை, தற்போது பல பகீர் தகவலைகளை வெளியிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கோவை மாவட்டத்தை சேர்ந்த, சிவா என்கிற ரத்னசீலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்ப பிரச்சனை காரணமாக தான் சிவா என்கிற ரத்னசீலன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இதற்கு காரணம் இவருடைய மனைவி விஜி பழனிச்சாமி என சில ஆடியோ ஆதாரங்களின் மூலம், தற்கொலை செய்து கொண்ட சிவாவின் பெற்றோர், புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவ்வப்போது, சில தகவல்களை வெளியிட்டு வரும் கவிஞர் தாமரை…

கவிஞர் தாமரை தற்போது தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

விஜி பழனிச்சாமி (கலர்ஸ் தொலைக்காட்சி) கோவை இளைஞன் சிவாவை ‘நாடகத் திருமணம்’ செய்து, தற்கொலைக்குத் தூண்டிய விவகாரம் பெரிதாக வெளிப்பட்டிருக்கிறது. சிவா இறப்பதற்குப் பலநாட்களுக்கு முன்பிருந்தே தனக்கும் அவளுக்குமிருந்த உறவு, அது வளர்ந்த விதம், சிதைந்த விதம், அவளது நம்பிக்கைத் துரோகம், பிற பாலியல் தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முடிந்தவரை கோர்வையாகப் பேசி ஒலிப்பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார். படங்களும் காணொலிகளும் உண்டு.

இவை அனைத்தும் கோவை காவல்துறையில் புகாரோடு ஆதாரங்களாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. காவல்துறை விசாரணையை ஆரம்பிப்பார்கள் என்று குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

பெரும் நம்பிக்கை மோசடி செய்து, பணநெருக்கடி கொடுத்து, அரசியல் தொடர்புகளைக் காட்டி அச்சுறுத்தி அந்த இளைஞனைத் தற்கொலைக்குத் தள்ளிய விஜி பழனிச்சாமி தண்டிக்கப்பட வேண்டியவர். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். #TNPolice #coimbatorepolice இதற்கிடையில், அவ்வொலிப்பதிவுகள், படங்கள் உள்ளிட்டவை ஊடகங்களுக்குக் கிடைத்தன. ஜூவி ஏடு வெளியிட்ட முதல் கட்டுரையைத் தொடர்ந்து பிறரும் விசாரித்து மற்ற தகவல்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

தந்தி தொ.கா, நியூஸ் தமிழ், நியூஸ்18, ஆசியாநெட் தமிழ், நக்கீரன் உள்ளிட்டவை வெளியிட்டுள்ளன. நான் இங்கே தந்தி தொ.கா செய்தித் துண்டை மட்டும் இணைக்கிறேன். பார்க்காதவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தடுத்த பதிவுகளில் மற்ற இணைப்புகளைக் கொடுக்க முயல்கிறேன். நான் இதில் எங்கு வருகிறேன் என்றால், இந்த விஜயலட்சுமிதான் 2012 இல் தியாகுவுடன் ஓடிய விஜயலட்சுமி எனும் உண்மையைப் பதிவு செய்யுமிடத்தில்,

இப்போது உள்ளவர்களுக்கு 2011-13 இல் தியாகு-விஜயலட்சுமி என்ன செய்தார்கள் என்று தெரியாது. அதை வெளிக்கொண்டு வருவது, நேரடியாகப் பாதிக்கப்பட்ட என் போன்றோரின் கடமை. இதைப் பார்ப்பவர்கள், படிப்பவர்கள் சிலரேனும் தியாகு, விஜயலட்சுமி போன்ற ‘அப்பாவி முகமூடி’ அணிந்த ஆபத்தானவர்களின் பிடியில் வீழாமல் எச்சரிக்கை அடையக்கூடும். இதற்கிடையில், நான் இதை எழுதக் கூடாது, விட்டுவிட்டுப் போக வேண்டும், இது ‘நடத்தையின்மேல் தாக்குதல்’ ( charecter assassination) என ஒரு கும்பல் கிளம்பி வருகிறது. எனக்கு வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பதா, வாய்விட்டுச் சிரிப்பதா என்றே தெரியவில்லை.. இதெல்லாம் ஒரு கேரக்டர், இதை அசாசினேட் செய்ய ஒரு ஸ்குவாடு…

இதையெல்லாம் யாரும் assassinate செய்ய வேண்டாம், தங்களைத் தாங்களே செய்து கொள்வார்கள்/கொண்டார்கள்… எனக்கெல்லாம் எந்த வேலையும் வைக்காமல் தன்னால் வந்து மாட்டியது சிறப்பு! தியாகுவுக்கு அரசியல் முகமூடி, போராளி அடையாளம் , விஜயலட்சுமிக்கு ‘மீடியா ஆளுமை’, ‘முற்போக்கு’ முத்திரை… இதை வைத்துத்தான் இவர்கள் தங்கள் வஞ்சக வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். வசூல் முக்கியமில்லையா ? இவர்கள் காட்டிலும் இதுவரை மழை பெய்து கொண்டுதான் இருந்தது, முட்டாள் தமிழர்கள் இருக்கும்வரை என்ன கவலை !!!

இளைஞர்கள் இளம்பெண்கள் என்ன ஏதென்று புரியாமல் இவர்கள் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். சிலர் எப்படியோ சுதாரித்து மீண்டு விடுகிறார்கள், சிலர் மீள முடியாமல் இழப்பைச் சந்திக்கிறார்கள். அதிகபட்ச இழப்பாக சிவா போன்றோரின் உயிர் !. ஓர் எளிய குடும்பம் இதை எப்படித் தாங்க முடியும் ?? இந்த மோசடிக்கு ஒரு முடிவு காண வேண்டும். எனக்குத் தெரிந்தவற்றை சிறுகச் சிறுகச் சொல்கிறேன். அதற்கும் முன்னதாக, சில விதயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்மேல் மீண்டும் மீண்டும் வைக்கப்படும் குற்றச்சாட்டு, நான் தியாகுவுக்கு இரண்டாவது மனைவி, திருமணம் செய்து கொள்ளவில்லை, முதல் மனைவியை விட்டுப் பிரித்துக் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன் என்பது !

இதற்கெல்லாம் சென்ற ஆண்டே ஆதாரங்களோடு பதில் சொல்லி விட்டேன். மீண்டுமொரு முறை நினைவு படுத்தி விடுகிறேன்.

• நான் தியாகுவுக்கு இரண்டாவது மனைவிதான், ஆனால் முறையற்ற மனைவியல்லேன். இருவரும் முறையாக மணமுறிவு பெற்று, முறையாகத் திருமணம் செய்து, முறையாகப் பதிவு செய்திருக்கிறோம். நான் தியாகுவை சந்திக்குமுன்பே தியாகு-இலதா இருவரும் பிரிந்திருந்தனர். (ஆவண ஆதாரம் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். மீண்டும் வெளியிடப்படும்). தியாகுவுக்கு சட்டபூர்வமான ஒரே மனைவி நான்தான் ! (இதில் பெருமை ஒன்றுமில்லை, படு கேவலம் அருவருப்பு. உள்ள நிலைமையை எடுத்துக் கூறுகிறேன்.

• தியாகு, 2012 இல் வீட்டை விட்டு விஜயலட்சுமி மேல் கொண்ட மோகத்தால் ஓடினார். பிறகு வீடு திரும்பினார் ( அந்தக் கதையைத் தனி அத்தியாயமாகச் சொல்கிறேன் ).

• 2012 இல் வீடு திரும்பிய பிறகும் விஜி-தியாகு உறவு தொடர்ந்தது. 2013 பாதியில் இருவர் உறவு உடைந்தது (தனிக்கதை!). விஜயலட்சுமி தன் அக்கா அனிதாவோடு என் வீட்டிற்கு நேரில் வந்து, தியாகு தன்னைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவதாகவும், தன்னை விடுவிக்க மறுப்பதாகவும், நான் உதவி செய்தால் ஓடிப் போய்விடுவதாகவும் தியாகுவைக் காட்டிக் கொடுத்தாள் !

• அப்போது நிகழ்ந்த ‘சேதாரத்தை’ மறைக்க, தியாகு ஓர் ‘உண்ணாவிரத’ நாடகம் நிகழ்த்தினார். அரசியல் காரணம் காட்டப்பட்டாலும் உண்மையில் விஜி ஏற்படுத்திய சேதாரத்தைக் குறைக்கவும், சேதாரத்தின் பழியை என்மீது போடவும், மீண்டுமொருமுறை வீட்டை விட்டு ஓடவும் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட நாடகம் (தனிக்கதை). இதற்கு உடந்தைதான் திருவாளர் சு !

• 2014 இல் தியாகு மீண்டும் வீட்டை விட்டு ஓட்டம். இந்த முறை வேறொரு பெண் !. இந்தப் பெண்ணின் பெயரையும் நான் குறிப்பிடப் போவதில்லை. ‘இந்தப் பெண்’ என்றுதான் கூறி வருகிறேன். ‘அந்தப் பெண்’ விஜயலட்சுமி பெயரையும் நான் எங்கேயும் இதுவரை குறிப்பிட்டதில்லை. தானாக சிக்கியதில் வெளிவந்தது.

• தியாகுவின் தொடர் அயோக்கியத்தனங்களால் பாதிக்கப்பட்டு, வெகுண்டெழுந்து நான் 2015 இல் தெருவுக்கு வந்து போராட்டம் நிகழ்த்தினேன். அந்தப்பெண், இந்தப்பெண் விவகாரங்கள் பொதுவெளியில் சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசமாக இருந்ததால், ஆதாரங்கள் அந்தக் காலகட்டத்தில் வெளியிடப்பட முடியாத வகையில் இருந்ததால், தனிப்பட்ட விசாரணை கோரினேன். நான்கு சுவருக்குள் வைத்து இவற்றையெல்லாம் வெளிப்படுத்தலாமே ! விசாரணையும் நடந்தது, விவரங்கள் வெளிவந்தன, ஆவணப்படுத்தப் பட்டன. அது நன்கு முன்னேறிய நிலையில், விசாரணைக்குத் தலைமையேற்ற ஐயா ஓவியர் வீரசந்தனம் அவர்களின் மறைவால் அது அப்படியே நிற்கிறது. அவருக்குக் கையளிக்கப்பட்ட ஆவணங்கள் என்னவாயிற்று என்றே தெரியவில்லை !

• இன்றுவரை, நான் தியாகுவின் சட்டபூர்வமான மனைவியாகவே நீடிக்கிறேன். இன்னும் மணமுறிவு பெறவில்லை. முன்னாள் மனைவி ( முறையாக மணமுறிவு பெற்றவர் ) இலதா, இப்போது இலதா தியாகு என்று போட்டுக் கொள்கிறார். அதில் எனக்கொன்றும் மறுப்புரையில்லை (அவருக்குமே அது எவ்வளவு கேவலம் என்று தெரியும். ஆனால் அது சட்டபூர்வமாக செல்லத் தக்கதில்லை. சும்மா, சமூகத்துக்காகப் போட்டுக் கொள்கிறார். இருவரும் ஒரே வீட்டில் அவ்வப்போது தங்கவும் செய்கிறார்கள், ஒன்றாக விழாக்களுக்குப் போய்வரவும் செய்கிறார்கள் . (ஆவணங்களோடு அடுத்தடுத்த பதிவில்)!.

• தியாகுவின் நோக்கம் அப்போது, என்னிடமிருக்கும் ஆதாரங்களைக் (சேதாரங்கள்) கைப்பற்றுவது ! அது இனி நடக்காது என்று தெரிந்து போனதால், என் பெயருக்குக் களங்கம் விளைவிப்பது, பொய்யான குற்றச்சாட்டுகள் வைப்பது என்று முயன்று வருகிறார். வரட்டும் வரட்டும். சென்ற ஆண்டு, விஜயலட்சுமியின் மகள் நொய்யல் என்பவளை விட்டு, என்மேல் அவதூறாக ஒரு கடிதம் எழுதிப் பரப்பினார், அது சிலருக்கு நினைவு இருக்கும். விஜி-தியாகு தொடர்பு முறிந்து போனதுபோல் தோற்றமளித்தாலும், அது தொடர்கிறது என்பதற்கு சென்ற ஆண்டில் இருவரும் போட்ட இந்த ‘நொய்யல் கடித’மே சாட்சி! அதனால்தான், சமரன் கொதித்தெழுந்து, தியாகுவுக்கு, சாணியில் முக்கிய செருப்படிகளாகத் தந்தான்… அதுவும் பலருக்கு நினைவிருக்கும். (மீண்டும் வெளியிடுகிறேன்).

• அவ்வளவு செருப்படி வாங்கியும் போதவில்லை தியாகுவுக்கு. மீண்டும் சமரனைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டார். அவருடைய நோக்கம் சமரனை என்னிடமிருந்து பிரிப்பது !. தொடர்ந்து முயல்கிறார், சகுனி வேலைகள் செய்கிறார். சமரனை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லியிருக்கிறேன்.

• என் உயிருக்கு அபாயம் உண்டு. எச்சரிக்கையாகவே இருக்கிறேன். அப்படியே நேர்ந்தாலும் நீங்களெல்லாம் விட்டுவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆவணங்கள் பத்திரமாகப் பலபேர்களிடம் உள்ளன. அவை பேசும். எந்த உண்மையை நான் சொல்லி விடுவேன் என்று தியாகு அஞ்சி நடுங்குகிறாரோ அது தன்னால் வெளியாகும் . மற்றவை பிறகு… என தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

2 minutes ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

42 minutes ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

2 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

3 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

4 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

5 hours ago

This website uses cookies.