மாமன்னன் திரைவிமர்சனம் – மகுடம் சூடுவரா? மாரி செல்வராஜ்?

Author: Shree
29 ஜூன் 2023, 2:11 மணி
mamannan
Quick Share

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் 2009ம் ஆண்டு ஆதவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஆரம்பித்து 2012ல் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். தற்போது அவர் முழு நேர அரசியலில் இறங்கிவிட்டதால் கடைசியாக ஒரு படத்தில் நடித்துவிட்டு சினிமாவிற்கு டாட்டா காட்டிடலாம் என முடிவெடுத்துள்ளார். அதன்படி மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று வெளியான மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் எப்படி இருக்கிறது. மாரி செல்வராஜுக்கு மகுடம் சூடுமா? உதயநிதி ஸ்டாலின் கடைசி படம் சிறந்த படமாக முத்திரை பதிக்குமா? என இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்கரு:

அடுத்தவரை அடக்கி ஆளத் துடிக்கும் ஆதிக்கக் குணம் கொண்ட ஒரு அரசியல் வாரிசுக்கும், அடங்கிப் போக மாட்டேன், எதிர்த்து நிற்பேன் என போராடும் மற்றொரு அரசியல் வாரிசுக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் ‘மாமன்னன்’.

கதைக்களம்:

சாதி அரசியலை மையப்படுத்தி உருவாகியிரும் படம் மாமன்னன். அப்பா கைகட்டி நின்றாள் மகன் அப்படி நிற்கமாட்டான் என்பதை மிகவும் அழுத்தமான , பவர் ஃபுல் அரசியல் பேசும் எமோஷனல் படமாக மாரி செல்வராஜ் கொடுத்திருக்கிறார். சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தைச் சேர்ந்தவர் வடிவேலு, அதே கட்சியை சேர்ந்த சேலம் மாவட்டச் செயலாளராக இருக்கும் வேறு சாதியைச் சேர்ந்தவர் பகத் பாசில். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் அப்பா வடிவேலுவை அவர் நடத்திய விதம் கண்டு பொறுக்காமல் உதயநிதி எதிர்த்துப் பேச பகத் பாசிலுக்கும், உதயநிதிக்கும் கைகலப்பாகிறது. இந்த சம்பவத்தால் உதயநிதி மீது தனிப்பட்ட வெறுப்பை காட்டும் பகத் கட்சியை விட்டு விலகி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடித்து அடுத்த தேர்தலில் எதிரெதிர் மோதுகிறார்கள். இதில் யாருக்கு வெற்றி என்பதுதான் மீதிக் கதை.

படத்தின் ப்ளஸ்:

படத்தின் பலமே வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிப்பு தான். வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. மாரி செல்வராஜின் இயக்கம், இடைவேளை காட்சி உள்ளிட்டவை அற்புதம். பாடல்கள், வசனங்கள் மற்றும் சிறப்பான மேக்கிங். பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம்.

படத்தின் மைனஸ்:

எமோஷன்ஸ், இரண்டாம் பாதி காட்சிகள், படத்தின் நீளம் உள்ளிட்டவை தொய்வு அடைகிறது. குறிப்பாக எமோஷனல் காட்டப்பட்டாலும் அது படத்தோடு ஒன்றி கனெக்ட் ஆகவில்லை. கீர்த்தி சுரேஷ் பெரிதாக பேசும்படியாக இல்லை.

இறுதி அலசல்:

பவர்ஃபுல் அரசியல் பேசியுள்ள மாமன்னன் ஆஹாஓஹோ என பேசவில்லை என்றாலும் ஒருமுறை பஹத் பாசில் , வடிவேலு நடிப்பிற்காக பார்க்கலாம் ஆக மொத்தம் படத்தின் மதிப்பெண்: 3/5.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 513

    2

    1