ரொம்ப நாளைக்கு அப்புறம் தலைவன் வாய்ஸ்ல… உருகி பாடி உயிரை உருக்கும் வடிவேலு!

Author: Shree
20 May 2023, 6:57 pm

தமிழ் சினிமாவின் முத்தான இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் 10 வருடங்களுக்கு மேலாக இயக்குனர் ராமிடன் உதவி இயக்குனராக பணி புரிந்து பின்னர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் அடிக்க அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மீண்டும் மாபெரும் ஹிட் கொடுத்தார். இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயடக்கி முடித்திருக்கிறார். இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் வடிவேலு ’ராசா கண்ணு’ எமோஷனல் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் இப்படம் உருக வைக்கிறது. பாடலின் ஒவ்வொரு வரியும் ஒரு வித வலியை நமக்கு கொடுக்கிறது. பல வருடங்கள் கழித்து வடிவேலு மீண்டும் பாடியுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ லிங்க்:

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!