‘கோ’ படத்தினை நினைவு படுத்துகிறதா தனுஷின் ‘மாறன்’?..! வெளியானது டிரெய்லர்..!

Author: Rajesh
28 February 2022, 5:08 pm

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் தான் மாறன். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திற்கும் இந்த படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மாறன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளனர்.
டிரெய்லரில் ‘நாம் எழுதறது மக்களுக்கு பிடிக்கிற மாதிரி இருக்கணும்’ என்று இளவரசு சொல்ல ‘பிடிக்கிற மாதிரி இருக்கக்கூடாது சார். மக்களுக்கு உண்மையைக் கொண்டுபோய் சேர்க்கிற மாதிரி இருக்கணும்’, ‘நாம எழுதறது உண்மை. யோசிக்கக்கூடாது’ போன்ற அழுத்தமான வசனங்கள் மூலம் கவனம் பெறுகிறார் தனுஷ்.

இதனையடுத்து டிரெய்லரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த சூழ்நிலையில், ‘கோ’ படத்தினையும் நினைவுக்குக் கொண்டு வருவதாகவே இருப்பதாக இருக்கிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 1411

    0

    0