வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!

Author: Selvan
20 January 2025, 9:11 pm

மதகதராஜா-க்கு அடித்த ஜாக்பாட்

சுந்தர் சி இயக்கத்தில் விஷால்,சந்தானம்,அஞ்சலி,வரலக்ஷ்மி உட்பட பலருடைய நடிப்பில் உருவான மதகதராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு,இந்த வருடம் பொங்கலையொட்டி வெளியானது.

படம் வெளியாகி தற்போது வரை ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு,அரண்மனை படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில்,தற்போது மதகதராஜா திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது.

மேலும் கடந்த சில வருடமாக தோல்வியை சந்தித்து வந்த விஷாலுக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.படத்தில் சந்தானம் காமெடி மற்றும் அவருடைய பஞ்ச வசனங்கள் ரசிகர்களை மேலும் குதூகலப்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு ஒரு நீண்ட நாட்களுக்கு பிறகு வாய் விட்டு சிரிக்கும் அளவிற்கு மதகதராஜா படம் அமைந்துள்ளது.வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து வசூலை குவித்து தற்போது வரை 45 கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வரக்கூடிய நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?