இந்த ஆண்டு பொங்கல் அன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகாத காரணத்தால் பல சிறிய படங்கள் பொங்கல் ரேஸில் குதித்தது.அந்த வகையில் 6 தமிழ் படங்கள் உட்பட ஷங்கரின் இயக்கத்தில் பான் இந்திய படமாக வெளிவந்த கேம் சேஞ்சர் படமும் வெளியானது.
இதையும் படியுங்க: மீண்டும் சமரச பேச்சு…ரவி மோகன்-ஆர்த்தி வழக்கில் நடந்த திடீர் திருப்பம்..!
பெரும் எதிர்பார்ப்பில் ஜனவரி 10 ஆம் தேதி வெளியான கேம் சேஞ்சர் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது.அதுகூடவே பாலாவின் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த வணங்கான் திரைப்படம் நல்ல வசூலை குவித்த வந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆன மதகதராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வணங்கானை பின்னுக்கு தள்ளியது.மேலும் ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த காதலிக்க நேரமில்லை ஓரளவுக்கு நல்ல கதை அம்சத்தை கொண்டிருந்தாலும்,வசூலை பெறாமல் திணறி வருகிறது.
விஷால்,சந்தானம்,வரலக்ஷ்மி அஞ்சலி நடிப்பில் பக்கா காமெடி கமர்சியல் படமாக வெளிவந்த மதகதராஜா நாளுக்கு நாள் தன்னுடைய வசூலை வாரி குவித்து வருகிறது.சிறிய பட்ஜெட்டில் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட் அடித்துள்ளதால் படக்குழு மிகவும் சந்தோசமாக உள்ளது.மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் வாய் விட்டு சிரிக்கும் படி இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் மெகா வெற்றியால் ரசிகர்கள் பலர் சந்தானத்தை மீண்டும் காமெடியாக நடிக்க வருமாறு அன்பு கட்டளை விடுத்தது வருகின்றனர்.நடிகர் விஷாலுக்கும் இப்படம் அவருடைய சினிமா கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.மதகதராஜா படத்தின் வெற்றியால் நல்ல கதை அம்சம் இருந்தும் வசூலை குவிக்க முடியாமல் வணங்கான்,காதலிக்க நேரமில்லை படம் திணறி வருகிறது.மேலும் முரளி மகன் ஆகாஷ் நடிப்பில் வெளியான நேசிப்பாயா படமும் மெட்ராஸ்காரன் திரைப்படம் இருந்த இடமே தெரியாமல் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.