மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!
Author: Selvan22 January 2025, 4:54 pm
வைரலாகும் விஷால்-மீனா போட்டோ
இந்த வருட பொங்கல் பண்டிகையையொட்டி சுந்தர் சி இயக்கத்தில் 12வருடங்களுக்கு பிறகு வெளிவந்த மதகதராஜா திரைப்படம்,ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருவதால்,படக்குழு அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று {ஜனவரி 21} தன்னுடைய 57வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய சுந்தர் சி திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய நண்பர்களுக்கு,படத்தின் வெற்றி பார்ட்டியை,தன்னுடைய பிறந்த நாள் அன்று கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்க: ஹீரோவா களமிறங்கும் கருணாஸ் மகன்….வெற்றிமாறன் கொடுத்த அதிரடி அப்டேட்…!
தனியார் கேளிக்கை விடுதியில் நடந்த இந்த பார்ட்டியில்,சுந்தர் சிஅவரது மனைவி குஷ்பு மற்றும் அவரது குழந்தைகளும் கலந்து கொண்டனர்.மேலும் நடிகர் விஷால்,நடிகை மீனா,யோகி பாபு,நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி,பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்,நடன இயக்குனர் பிருந்தா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இந்த புகைப்படங்களை நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
மேலும் நடிகர் விஷால் மீனாவின் தோலில் கைபோட்டு மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.