ட்ரெண்டாகும் மதகதராஜா ட்ரைலர்
இயக்குனர் சுந்தர் சி இயக்ககத்தில் விஷால் நடித்திருக்கும் மதகதராஜா திரைப்படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு வரும் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.கடந்த 2013 ஆம் ஆண்டே இப்படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சில பிரச்சனைகளால் தள்ளிப்போனது.
ஒரு கட்டத்தில் இப்படம் வரவே வராது என ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர்,அதன் பிறகு படக்குழுவும் எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்கவில்லை.இந்த நிலையில் தற்போது திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிச்சது மட்டுமல்லாமல்,மும்மரமாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
இதையும் படியுங்க: பிரபல பாலிவுட் நடிகரிடம் இருந்து அழைப்பு…சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்…!
சமீபத்தில் சென்னையில் நடந்த பட நிகழ்ச்சியில் விஷால் மிகவும் சிரமத்துடன் கலந்துகொண்டார்.அவருக்கு வைரல் காய்ச்சல் இருந்தாலும்,தன்னுடைய படத்திற்காக அவர் கலந்து கொண்டதை ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் அவரை பாராட்டி,உடல்நிலை சீக்கிரம் குணமாகி,மீண்டும் பழைய விஷாலாக வரவேண்டும் என பிரார்த்தனை பண்ணி வருகின்றனர்.இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக படத்தின் புது ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் காமெடி,கிளாமர்,சண்டை என மசாலா கலந்த ஸ்டைலில் சுந்தர் சி வெளியிட்டுள்ளார்.படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது,அதே மாதிரி விஷாலின் சண்டை கட்சிகளும் அற்புதமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.