கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த படத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தாலும் அப்பாவின் கைதேர்ந்த தொழிலான சமையல் தொழிலை கையில் எடுத்து கலக்கி வருகிறார் ரங்கராஜ். கீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக நடித்த பென்குயின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அரசியலுக்கு மட்டும் வந்திடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அட்வைஸ்..!
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 400 திருமணங்களுக்கு பிரமாண்டமான, வித விதமான விருந்துகளை தயார் செய்து அசத்தி வருகிறார். அப்பா காலத்தில் சிவாஜி ருசித்த இவர்களின் சமையலை தற்போது, பல்வேறு பிரபலங்களின் வீட்டு சமையல்களில் இவர்கள் தான் அசத்தி வருகிறார்கள்.
மேலும் படிக்க: Enjoyment-க்காக பண்ணிட்டேன்.. விஜய் பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட Video..!
இவரது சமையலை அரசியல் பிரபலங்கள் முதல் திரையுல நட்சத்திரங்கள் வரை பலர் ருசித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோரும் இவருடைய உணவை ருசித்துள்ளார். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகிய பின் அவருக்கு பதிலாக நடுவராக வந்துள்ளவர் மாதம்பட்டி ரங்கராஜ்.
திரை நட்சத்திரங்கள் மூலம் பிரதமர் மோடி வரை பலருக்கும் தன் கையால் சமைத்துக் கொடுத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ் குடும்பத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.