“கங்குவா” தேறுமா தேறாதா? மனசுல பட்டத கொட்டி தீர்த்த மதன் கார்க்கி – திரை விமர்சனம்!

Author:
24 October 2024, 10:10 am

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தில் இருந்து வருபவர்தான் நடிகர் சூர்யா. தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சூர்யா தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் சூர்யா நடித்திருக்கிறார் .

kanguva update

மிகப்பெரிய பட்ஜெட் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திர நடிகையான திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார் .

இவர்களுடன் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். அடுத்த மாதம் 14ஆம் தேதி அதாவது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சூர்யா மற்றும் பட குழுவினர் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை தொடர்ந்த ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் பிரபல பாடலாசிரியர் ஆன மதன் கார்த்தி சூர்யாவின் கங்குவா படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறி இன்று கங்குவா படத்தின் முழு பதிப்பை பார்த்தேன் டப்பிங் செய்யும்போது ஒவ்வொரு காட்சியும் 100 தடவைக்கு மேல் பார்த்தேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது படத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது .

madhan karky

இந்த காட்சிகளின் பிரம்மாண்டம், கலையின் நுணுக்கம், கதையின் ஆழம், இசையின் கம்பீரம் உள்ளிட்ட எல்லாமே படத்துக்கு பவர் ஃபுல்லா இருக்கிறது. சூர்யாவுடன் இணைந்து இப்படி ஒரு மிகச்சிறந்த படைப்பை. உருவாக்கிய இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் என மதன் கார்க்கி கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:

அவரின் இந்த விமர்சனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருப்பதாக சூர்யா ரசிகர்கள் கூறி வருகிறார்கள். எனவே வருகிற 14-ஆம் தேதி இந்த தீபாவளி சூர்யாவின் சிறப்பான தீபாவளியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 147

    0

    0