மின்னலே படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாய்ப்பை விடாத மாதவன்..!
Author: Vignesh22 March 2024, 7:06 pm
90ஸ் காலத்தில் முன்னனி நடிகராக இருந்தவர் மாதவன். இவர் இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் , ரன் , அன்பே சிவம் , ஆய்த எழுத்து, இறுதிச்சுற்று , விக்ரம் வேதா போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் இந்தியில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மாதவன் முதலில் நடித்த அலைபாயுதே திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால் அடுத்தது என்னவளே படத்தில் நடித்திருந்தார். அலைபாயுதே ஹிட் ஆன உடனே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து தயாரிப்பாளர்கள் மாதவனை புக் செய்தார்கள்.
அவரது அழகும், நடிப்பும் குறிப்பாக பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தது. அலைபாயுதே திரைப்படம் வெளியான சமயத்தில் ஷாலினி – மாதவனின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. அப்படத்தை காண காதல் ஜோடிகள் திரையரங்கிற்கு படையெடுத்தார்கள். குறிப்பாக மாதவனின் அழகுக்கே பெண் ரசிகைகள் ஏராளமானோர் அவரை உருகி உருகி காதலித்ததுண்டு.
முதல் படமான மின்னலே படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க வந்தது மாதவன் கிடையாதாம். இந்த கதையை சூர்யாவிற்காக பண்ணலாம் என முடிவு செய்து சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவக்குமாரிடம் மின்னலே படத்தின் கதையை கூறியுள்ளார் கௌதம் மேனன். ஆனால், அந்த கதையை சிவக்குமார் நிராகரித்துவிட்டாராம். அதன் பின் தான் மின்னலே கதை மாதவனிடம் கூறினாராம் கௌதம் மேனன். முதல் படத்தில் சூர்யாவுடன் இணைய முடியவில்லை என்றாலும், காக்க காக்க வாரணம் ஆயிரம் என தொடர்ந்து அவருடன் பணியாற்றினார் கௌதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.