3 வயது மூத்த நடிகையை விடாமல் துரத்தி காதல் செய்த மாதவன்.. அவர் யார் தெரியுமா?

Author: Vignesh
1 March 2024, 10:25 am

90ஸ் காலத்தில் முன்னனி நடிகராக இருந்தவர் மாதவன். இவர் இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் , ரன் , அன்பே சிவம் , ஆய்த எழுத்து, இறுதிச்சுற்று , விக்ரம் வேதா போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் இந்தியில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மாதவன் முதலில் நடித்த அலைபாயுதே திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால் அடுத்தது என்னவளே படத்தில் நடித்திருந்தார். அலைபாயுதே ஹிட் ஆன உடனே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து தயாரிப்பாளர்கள் மாதவனை புக் செய்தார்கள்.

madhavan-updatenews360

அவரது அழகும், நடிப்பும் குறிப்பாக பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தது. அலைபாயுதே திரைப்படம் வெளியான சமயத்தில் ஷாலினி – மாதவனின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. அப்படத்தை காண காதல் ஜோடிகள் திரையரங்கிற்கு படையெடுத்தார்கள். குறிப்பாக மாதவனின் அழகுக்கே பெண் ரசிகைகள் ஏராளமானோர் அவரை உருகி உருகி காதலித்ததுண்டு.

ஆனால், மாதவன் உருகி உருகி காதலித்த பெண்குறித்த விவரம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாதவன் இது குறித்து பேசி உள்ளார். அதாவது, தான் Qayamat Se Qayamat Tak படத்தை பார்த்தபோது நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். மேலும், இந்தியில் நடிக்க வந்தபோது தனக்கு இருந்த ஒரே லட்சியம் எப்படியாவது ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்று ஓப்பனாக தெரிவித்திருக்கிறார்.

madhavan

நடிகை ஜூஹி சாவ்லா மீது தீராத க்ரஷ் இருந்ததை தன் அம்மாவிடவும் கூறியதாவவும், அன்று தன்னுடைய ஒரே நோக்கம் ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்வது மட்டும் தான் என பலவருடத்திற்கு பின்னர் தன் காதல் கதையை மாதவன் தெரிவித்துள்ளார். தற்போது, நடிகர் மாதவன் நடிகை ஜூஹி சாவ்லாவுடன் இணைந்து ‘தி ரயில்வே மேன்’ எனும் வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 229

    0

    0