பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் ரூ.48 கோடிக்கு மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட் நடிகர்கள் பெரும்பாலும், வீடுகள் வாங்கவும், அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கவும் பல கோடிகளை செலவழித்து வருகின்றனர். சிலர் நிலங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாதுரி தீக்ஷித் வாங்கி உள்ள குடியிருப்பு பற்றிய தகவல் வெளியாகி பாலிவுட் பிரபலங்களையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மாதுரி தீக்ஷித் அழகே பொறமைப்படும் பேரழகுக்கு சொந்தக்காரி மாதுரி தீக்ஷித் என ரசிகர்கள் அவரை இப்போதும் கொண்டாடி வருகின்றனர்.
சீனியர் நடிகை ஆகி விட்டாலும், இன்னமும் சிறப்பான ரோல்களில் பாலிவுட்டில் நடித்து கெத்துக் காட்டி வருகிறார். அதே போல வெப்சீரிஸ்களிலும் மாதுரி தீக்ஷித் மாஸ் காட்டி வருகிறார். வாடகை வீட்டில் மும்பையில் நடிகை மாதுரி தீக்ஷித் தற்போது மாதம் 12.5 லட்சத்துக்கு சொகுசான வாடகை வீட்டில் தங்கி வருகிறார். 3 ஆண்டுகள் வரை அங்கே அவர் தங்கியிருக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சொந்தமாக ஒரு சொகுசு வீடு வாங்க முடிவு செய்த மாதுரி தீக்ஷித் வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் விலையை கேட்டாலே பலரும் ஆடிப் போய்விடுவார்கள். 48 கோடி ரூபாய்க்கு மும்பையில் உள்ள ஹைஃபை ஆன இடத்தில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை நடிகை மாதுரி தீக்ஷித் வாங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களின் பார்வையையும் அவர் பக்கம் திருப்பி இருக்கிறது.
அதுவும் 53வது மாடியில் 5,384 சதுர அடியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை விலைக்கு வாங்கி உள்ளார் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் அதற்கான பத்திரப்பதிவு நடைபெற்றதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 53வது மாடியில் இருந்து பார்த்தால் டோட்டல் மும்பையே செம சூப்பராக தெரியும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சினிமாவில் 1984ம் ஆண்டு வெளியான அபோத் எனும் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதுரி தீக்ஷித். தேஸாப், பிரேம் பிரதிக்யா, தில், சாஜன், பேட்டா, தேவ்தாஸ் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக 2019ல் வெளியான கலங்க் படத்தில் நடித்திருந்தார். 55 வயதாகும் மாதுரி தீக்ஷித் நடிப்பில் விரைவில் மஜா மா படம் வெளியாக காத்திருக்கிறது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.