‘ரங்கநாயகியா நடிக்க வேண்டியது நான்’.. ரஜினிகாந்த் என்ன தான் ஜோடியா நடிக்க சொன்னார் : ரகசியம் உடைத்த மதுவந்தி..!

Author: Vignesh
15 December 2022, 11:20 am

ரஜினி படத்தில் மீனாவிற்கு முன் ரஜினி தன்னை தான் நடிக்க அழைத்தார் என்று ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி கூறி இருக்கும் வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சோசியல் மீடியா மீம் கிரியேட்டர்கள் மதுவந்தி இந்த பெயரை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். ஒய்.ஜி. மகேந்திரன் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் தான் மதுவந்தி. இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘தர்மதுரை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

madhuvanthi - updatenews360

இந்த படத்தில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி முக்கிய ரோலில் நடித்திருந்தார். இது தான் நடிகை மதுவந்தி அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார் மதுவந்தி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து நடிகை மதுவந்தி ஆர்யாவின் ‘கடம்பன்’ மற்றும் ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார். அதன் பிறகு வெள்ளித் திரையுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை மதுவந்தி, சின்னத் திரையிலும் நுழையலாம் என்று முடிவெடுத்து சன் டிவியில் சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘வாணி ராணி’ தொடரிலும் நடித்தார். பிரபல நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்த இந்த சீரியலில் ‘சந்திரிகா’ என்ற கேரக்டரில் நடித்திருந்தார் மதுவந்தி.

madhuvanthi - updatenews360

மதுவந்தி அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஜெமினி கணேசன் – நடிகை சாவித்ரியின் மகளான விஜய சாமுண்டீஸ்வரியின் மகன் தான் இந்த அருண் என்பது குறிப்பிடத்தக்கது. அருண், மதுவந்தி தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது அருண், மதுவந்தி இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

2020ஆம் ஆண்டு லாக் டவுனின் போது தான் மதுவந்தியை பலரும் அறிந்தது. அந்த சமயத்தில் மதுவந்தி இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு 5000 கோடியை அவர்களது வங்கி கணக்கில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மோடி செலுத்தி இருப்பதாக கூறி இருந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ இவர் மீம் மெட்டீரியல் ஆனதை தொடர்ந்து அடிக்கடி பல முறை இவர் மீம் மெட்டீரியலாக சமூக வலைதளத்தில் இருந்து வந்தார்.

madhuvanthi - updatenews360

இப்படி ஒரு நிலையில் முத்து படத்தில் தன்னை தான் ரஜினிகாந்த் நடிக்க சொன்னார் என்று மதுவந்தி கூறி இருப்பது சமூக வலைதளத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தது.

madhuvanthi - updatenews360

அதில் பேசிய அவர் ‘நான் கல்லூரி படிக்கும் போது முத்து படத்தில் ரங்கநாயகி நடிக்க ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்தது அதேபோல கமல் படத்தில் நடிக்க கூட அழைப்புகள் வந்தது ஆனால் அந்த சமயத்தில் என்னுடைய பாட்டி அனுமதிக்கவில்லை.

படிப்பை முடித்துவிட்டு தான் எதுவாக இருந்தாலும் என்று மிகவும் கண்டிப்பாக சொல்லிவிட்டார்’ என்று கூறியிருக்கிறார்.

  • Plan To ban for Vijays Jana Nayagan Movie விஜய் படத்துக்கு தடை… பகடைக்காயாகும் எஸ்கே : சினிமாவில் அரசியல் விளையாட்டு!
  • Close menu