தன்னுடைய 30 லட்சம் மதிப்பிலான பொருள்களை மீட்டுத்தர வேண்டும், பைனான்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒய்.ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒய்.ஜி மகேந்திரன் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர். இவரின் மகள் மதுவந்தியை பற்றி அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சை சோசியல் பற்றி வந்து கொண்டே இருக்கிறது. பாஜகவின் செயற்குழு உறுப்பினராக மதுவந்தி இருக்கிறார்.
ஒய்.ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள ஆசியான அப்பார்ட்மெண்டில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்தார்.
2016 ஆம் ஆண்டு மதுவந்தி இந்த வீடு வாங்குவதற்காக இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளதாக தெரிகிறது. வீட்டை வாங்கிய பிறகு சில தவணைகள் மட்டும் இவர் கட்டி வந்துள்ளார்.
அதற்குப் பின்னர் மதுவந்தி எந்த தவணையும் கட்டவில்லை மற்றும் முழு பணமும் திருப்பி செலுத்தவில்லை என்று தெரியவருகிறது. பிறகு பல மாதங்களாகவே வட்டி பணம் கட்ட சொல்லி இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் கேட்டு இருந்தார்கள்.
ஆனால், பணம் கட்டாமல் இன்று நாளை என்று இழுத்தடித்து வந்துள்ளார் மதுவந்தி . இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்ட சொல்லி அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும், பைனான்ஸ் நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ்க்கு மதுவந்தி எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை.
இதனை அடுத்து நீதிமன்றத்தில் இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மதுவந்தி மீது வழக்கு போட்டிருந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தி செலுத்த வேண்டிய தொகைக்கு அவரின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அட்வகேட் கமிஷனர் வினோத்குமார் முன்னிலையில் மதிவந்தியின் வீட்டை போலீசார் பாதுகாப்போடு சீல் வைத்து வீட்டு சாவியை இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், வீடு சீல் வைக்கப்பட்ட சில தினங்களிலேயே வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் தரப்பில் இருந்து மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. ஆனால், மதுவந்திப் பொருட்களை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரியவருகிறது.
பின்னர் இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் வீட்டை மற்றொரு நபருக்கு ஏலம் விட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மதுவந்தி புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், வீட்டை ஏலம் விட்டது எனக்கு தெரியாது. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் மாயமாகி இருக்கிறது.
பொருள்களின் மொத்த மதிப்பு 35 லட்சம். அந்த பொருட்களை மீட்டு தர வேண்டும். தனக்கு தெரியாமல் தன்னுடைய வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சேர்த்து ஏலம் விட்ட பைனான்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக, இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளர் உமா சங்கர் மற்றும் கார்த்திகேயன் உட்பட பத்து நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் குறிப்பிட்டு உள்ளார். இதனை அடுத்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
This website uses cookies.