மிரட்டும் அழகு… செம ஸ்டைலிஷ்… மடோனாவின் மார்க்கமான புகைப்படங்கள்..!

Author: Rajesh
4 March 2022, 6:54 pm

பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜூங்கா’ படத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்தார். அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார்.

முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் கவர்ச்சியான வீடியோக்கள், புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது  செம ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!