விடாமுயற்சி FDFSக்கு கூட கூட்டம் வரல.. சரியப்போகும் அடுத்த மாபெரும் நினைவு!

Author: Hariharasudhan
20 February 2025, 5:55 pm

மதுரையில் புகழ்பெற்ற அம்பிகா திரையரங்க விரைவில் இடிக்கப்பட உள்ளதாக அதன் உரிமையாளர் கூறியது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

மதுரை: சமீபத்தில் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தை திரையிட்ட போதும் கூட முதல் நாளிலேயே பெரிய கூட்டம் வரவில்லை என்ற கண்ணீரோடு 35 ஆண்டு கால நினைவுகளை சுமந்து கொண்டு இறுதி மூச்சைப் பிடித்துக் கொண்டு நிற்கிறது, மதுரை அண்ணா நகரில் உள்ள அம்பிகா திரையரங்கம்.

மதுரையின் புகழ்பெற்ற இந்த திரையரங்கம் விரைவில் இடிக்கப்பட உள்ளது. காரணம், கோபுரம் சினிமாஸ், வெற்றி சினிமாஸ் (மாட்டுத்தாவணி), வெற்றி சினிமாஸ் (வில்லாபுரம்), ரேடியன்ஸ் சினிமாஸ், ஐநாக்ஸ் (விஷால் டி மால்) என நவீன தொழில்நுட்பங்களுடன் மல்டிபிளக்ஸ் தரத்தில் மதுரை மாநகரில் தியேட்டர்கள் உள்ளன.

இதனால் ஒரு ஸ்க்ரீன் அல்லது இரண்டு ஸ்க்ரீன் வைத்து நடத்தப்பட்டு வந்த திரையரங்குகள் ரசிகர்கள் மத்திய போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு அம்பிகா தியேட்டரும் விதிவிலக்கல்ல. அதேபோல், அம்பிகா திரையரங்கம் அருகிலேயே பிரியா காம்ப்ளக்ஸ், ஜாஸ் சினிமாஸ் போன்ற பல்வேறு பெரிய திரையரங்குகள் உள்ளன.

Madurai Ambika Cinemas

இந்த நிலையில், மதுரையின் முக்கிய பகுதியில் இடம் பெற்றுள்ள அம்பிகா தியேட்டரை இடித்துவிட்டு, வணிக வளாகத்தைக் கட்ட அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், இது குறித்து அம்பிகா ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள திரையரங்க உரிமையாளர், “அம்பிகா திரையரங்கத்தின் கடைசி ரிலீஸ் வெள்ளிக்கிழமை வரும் படம்தான்.

இதனால் ரசிகர்கள், அபிமானிகள் அனைவரும் கடைசி ஒரு வாரத்தில் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இங்கு A கிரேடு தரத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளோம். இதனைக் கட்டி முடிக்க 18 முதல் 24 மாதங்கள் ஆகும். அப்போது, மக்கள் மீண்டும் விரும்பி வரும் இடமாக இது இருக்கும்.

இதையும் படிங்க: தியேட்டரில் திணறுகிறதா ‘விடாமுயற்சி’ …கேள்விக்குறியாகும் லைக்கா நிறுவனம்.!

இதனை இடிக்கப் போகிறோம் என்று நினைக்கவில்லை. புதுப்பிக்கிறோம் என்றுதான் நினைத்து பணிகளைத் தொடங்கியுள்ளோம். மதுரைக்குத் தேவையான ஒரு விஷயத்தை கொண்டு வருகிறோம். கிட்டத்தட்ட திரையரங்கம் கட்டி 35 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையின் பிரபல திரையரங்குகளில் ஒன்றான உதயம் தியேட்டர் இடிக்கப்பட்டது. இதன் காட்சிகள் வெளியாகி, பல ரசிகர்களின் நினைவுகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர காரணமாக அமைந்தது எனலாம். இந்த நிலையில் தான், மதுரையின் அடையாளங்களில் ஒன்றான அம்பிகா தியேட்டரும் இடிக்கப்பட உள்ளது.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
  • Close menu