நானும் பொம்பள புள்ளைய பெத்தவன்.. இதை மட்டும் அறிவிங்க- கையெடுத்து கும்பிட்ட மதுரை முத்து..!(வீடியோ)
Author: Vignesh7 March 2024, 7:10 pm
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர். மேலும், நீதிபதி இளவரசன் சிறை வளாகத்திற்கு சென்று கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.பின்னர் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்களை வரை கடும் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், மதுரை முத்து இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வழக்கில் புதுச்சேரி வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்த மதுரை முத்து, தமிழகத்திலும் வழக்கறிஞர்கள் இதே போல் அறிவித்தால் பெற்றோர்கள் உங்களுக்கு காலம் முழுக்க நன்றி உணர்வோடு இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பேசுகையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு துபாயில் கொடுப்பது போல கடுமையான தண்டனைகளை கொடுக்க வேண்டும் என்றும், கற்பழித்தவர்களை நடுரோட்டில் வைத்து கல்லால் அடித்துக் கொள்வது போல இல்லை என்றாலும் நம்முடைய நாட்டில் நம்முடைய நாட்டில் இந்த குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.