விவாகரத்து முடிவில் மதுரை முத்து?.. நம்பி ஏமாந்துட்டேன்.. இரண்டாம் மனைவி பகீர் தகவல்..!
Author: Vignesh3 ஜூன் 2024, 1:08 மணி
சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் மதுரை முத்து. கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பிரபல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் அவ்வப்போது, மேடைப் பேச்சாளராகவும், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். இப்போது, விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது நகைச்சுவையை வெளிக்காட்டி வருகிறார். இவர் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்.
மதுரை முத்துவின் மனைவி பெயர் லேகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். எதிர்பாராத விதமாக லேகா கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். பின் தனது 32வது வயதில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மதுரைமுத்து மறுமணம் செய்துகொண்டார்.
மேலும் படிக்க: என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்… ஜெமினி கணேசன் மகளுடன் ரகசிய உறவில் இருந்த சூப்பர் ஸ்டார்..!
இதனை பலரும் விமர்சித்த போதிலும், மதுரை முத்து தன் இரண்டு மகள்களுக்காக தான் திருமணம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், தன் முதல் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று மதுரை முத்து கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Insecure ஆக இருந்துச்சு.. மோசமான அனுபவம் குறித்து பேசிய சாய் தன்ஷிகா..!
அண்மையில், தனது முதல் மனைவி குறித்து ஒரு பேட்டியில் பேசிய மதுரை முத்து, “என் முதல் மனைவிக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவர் இல்லாமல் அவர் படும் கஷ்டத்தை கண்டு வருத்தப்பட்டேன், நான் உங்களை திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்டேன். இரண்டாவது திருமணம் என்பதால் இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை, பல எதிர்ப்புகளுடன் தான் நாங்கள் திருமணம் செய்தோம்” என கூறி இருந்தார்.
இந்த நிலையில், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் நீத்து அதாவது மதுரை முத்துவின் இரண்டாவது மனைவி எதிர்மறையான சில பதிவுகளை பதிவிட்டு வருகின்றார். வருத்தத்துடன் அவர் இருக்கும் சில பதிவுகள் வெளிவந்தது. அண்மையில், மருத்துவமனையில் இருப்பது போன்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அதில், யாரையும் முழுவதுமாக நம்ப வேண்டாம் என்பது போன்றும், பலருக்காக பலமுறை இறங்கி வந்திருப்பதாகவும் பலருக்காக பேசியிருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: மேலும் படிக்க: ஒதுங்கிய சூர்யா, இறங்கிய கவின்.. 18 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்..!
இதனை பார்த்த ரசிகர்கள் மதுரை முத்துவிற்கும் அவருடைய மனைவிக்கும் ஏதாவது பிரச்சனையா அதனால்தான் இப்படி அவர் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்பு வந்தனர்.
இந்நிலையில், மதுரை முத்துவின் இரண்டாம் மனைவி நீத்து சோசியல் மீடியா பக்கத்தில் எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும். அது என்னை மட்டும் நேசிக்க வேண்டும், அவருக்காக நான் பொட்டு வைத்து சந்தோசமாக இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க் கொண்டே இருக்கிறேன் என்று நீத்து சோகமான வீடியோவில் வெளியிட்டுள்ளார். இதனால், முத்துவுக்கும் நீத்து இடையே சண்டை ஏற்பட்டு விட்டதா இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்களா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
0
0