20 ஆயிரம் சதுர அடியில் 20 ரூம்கள்… வடிவேலுவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்து பிரம்மிக்கும் மதுரை மக்கள்!
Author: Rajesh4 January 2024, 1:08 pm
தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.
“என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது. அவருடன் நடித்த பல பிரபலங்கள் அவரின் மோசமான குணத்தை வெளிப்படையாக பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
அதையும் தாண்டி அவர் தொடர்ந்து பெரிய நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார். ஆம், வடிவேலுவின் வளர்ச்சி பொருள் ரீதியாகவும், வருமான ரீதியாகவும் குறையவே இல்லை.அந்தவகையில் தற்போது மதுரையில் 20 ஆயிரம் Square Ft-ல் 20 ரூம்கள் கொண்டு பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார். இதில் அவர் தன் குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பமாக வாழ ஆசைப்பட்டு பார்த்து பார்த்து கட்டி வருகிறாராம். அவர் ஏற்கனவே மதுரையில் மிகப்பெரிய வீடு ஒன்றை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.